/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் குடிக்க மறக்கும் மாணவர்கள்; இனி 'வாட்டர் பெல்' திட்டம் அவசியம்
/
தண்ணீர் குடிக்க மறக்கும் மாணவர்கள்; இனி 'வாட்டர் பெல்' திட்டம் அவசியம்
தண்ணீர் குடிக்க மறக்கும் மாணவர்கள்; இனி 'வாட்டர் பெல்' திட்டம் அவசியம்
தண்ணீர் குடிக்க மறக்கும் மாணவர்கள்; இனி 'வாட்டர் பெல்' திட்டம் அவசியம்
ADDED : ஜூன் 23, 2025 11:56 PM

கோவை; குழந்தைகளிடம் ஏற்படும் நீரிழப்பு பிரச்னையைத் தவிர்க்க, தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் 'வாட்டர் பெல்' திட்டம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குழந்தைகள் பள்ளிகளில் அதிக நேரம் செலவிடுவதால், பாடத்திட்டத்துடன் உடல் மற்றும் மன நலம் அவசியமாகிறது. பாடச்சுமை உள்ளிட்ட அழுத்தம் காரணமாக, குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறார்கள். தலைவலி, சிறுநீர் தொற்று, தோல் உலர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். பல்வேறு நாடுகளில் 'வாட்டர் பெல்' எனப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும், கேரளா போன்ற சில மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வியாளர் லெனின் பாரதி, மாநில அரசு மற்றும் பள்ளி கல்வித்துறையிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பள்ளிகளில், தண்ணீர் குடிக்க தேவையான நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தண்ணீர் குடிப்பதை இடைவேளைக்கு மட்டும் என கட்டுப்படுத்தக் கூடாது. மாணவர்களின் வயது, எடைக்கேற்ப தினமும், 1.5 லிட்டரில் இருந்து, 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பள்ளி நேரங்களில் குடிநீர் குடிப்பதற்காக, மூன்று அல்லது நான்கு முறை 'வாட்டர் பெல்' திட்டத்தை, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.