ADDED : மார் 30, 2026 05:47 PM

அ நிறம் | அளவு
கோவை: இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றவர்கள், துறை வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுடன் பெற்றோரும் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவன் சுப்பிரமணியின் 'கரையாத காதல்', மாணவிகள் கீர்த்தனாவின் 'உரைக்காத வார்த்தைகள்', மீனாட்சியின் 'கவிதைகளும் கிறுக்கல்களும்', வைதேகியின் 'வைதேகி கவிதைகள்' ஆகிய கவிதை நுால்களை அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா வெளியிட்டனர்.
மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை விழாவில் அரங்கேற்றினர். கல்லுாரியின் முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
