/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்
/
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்
ADDED : ஆக 10, 2025 02:23 AM

கோவை, : ஆர்.வி.எஸ். கல்வி குழுமங்களின் கீழ் இயங்கும் இயன்முறை மருத்துவக் கல்லுாரி, மருந்தாக்கவியல் கல்லுாரி, செவிவிலியர் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா, சூலுார் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.எச். ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் அருண் பழனிச்சாமி பங்கேற்று பேசுகையில், ''தன் கனவின் வாயிலாக, ராமேஸ்வரத்திலிருந்து ஜனாதிபதி பதவி வரை, அப்துல்கலாம் உயர்ந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து, உயர்ந்த நிலைக்கு அடைய வேண்டும்,'' என்றார் .
நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், கல்லுாரி செயலர் சாரம்மாள், தாளாளர் ஸ்ரீ வித்யா லட்சுமி, அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பட்டதாரிகளை வாழ்த்தினர்.