/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு கவுரவம்
/
கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு கவுரவம்
ADDED : ஜூலை 20, 2025 01:35 AM

கோவை :மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை மற்றும் ஸ்ரீ கவிதாலயா பவுண்டேசன் இணைந்து, காமராஜர் 123வது பிறந்தநாள் விழாவை கொண்டாடின. இதில், ஆசிரியர் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தடகளம், நீச்சல், செஸ், பாடல் என கலை, விளையாட்டு போட்டிகளில் தேசிய, மாநில அளவில் வெற்றி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மாணவி ரேஷ்மி ஜானு, புரோகிதா ஸ்ரீ, நிஷா மற்றும் மாணவர்கள் சஞ்சித், தர்ஷன் ஆகியோருக்கு கல்வி சுடர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்கள் லுாசியா, புவனா, உமாராணி ஆகியோருக்கு, தியாகச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இன்றைய மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது 'குடும்ப சூழலா? சுமூக குழலா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குனர் முத்துக்குமார், ஸ்ரீ கவிதாலயா பவுண்டேசன் நிறுவனர் கவிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.