/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த தானம் செய்ய மாணவர்கள் ஆர்வம்
/
ரத்த தானம் செய்ய மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜன 25, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் பல்கலை மாணவர் மன்றம், அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை சார்பில், ரத்ததான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
வேளாண் பல்கலையின் 115வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம், தேசிய மாணவர் படை சார்பில் நடந்த இம்முகாமில், பொது மருத்துவ பரிசோதனை, ரத்த வகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம், அதன் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் 40 யூனிட் ரத்தம், தானமாக வழங்கப்பட்டது.
இ.எஸ்.ஐ., ரத்த வங்கி முதன்மை மருத்துவர் உமாசரோஜினி, மருத்துவர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

