/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைக்கு செல்லும் பெண்கள் இனி கவலைப்பட வேண்டாம்! ஆபீசில் இருந்தபடி வேலை வாங்கலாம்

ADDED : ஜன 25, 2026 05:31 AM

இ ன்றைய நகர்ப்புற வாழ்க்கையில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலை என்பது தினசரி போராட்டமாகவே மாறிவிட்டது.
கூட்டு குடும்பங்கள் குறைந்து, நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், வீட்டு வேலைகளில் உதவ ஆட்கள் கிடைப்பதும் சிரமமாகி வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்திய நகர்ப்புற வீடுகளில் சுமார் 25 சதவீதம் பேர் ரோபோட் வேக்கியூம் கிளீனரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
வீடு பெருக்குதல், தூசி துடைத்தல் போன்ற வேலைகளுக்கு தினமும் நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு, இந்த இயந்திரம் ஒரு பெரிய தீர்வாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பரமாகப் பார்க்கப்பட்ட ரோபோட் வேக்கியூம் கிளீனர், இன்று தேவையான ஒரு வீட்டு உபகரணமாக மாறி வருகிறது.
மொபைல் போன் ஆப் மூலம் வீட்டில் இல்லாத நேரத்திலும் இந்த ரோபோட்டை இயக்க முடியும். அலுவலகத்தில் இருந்தபடியே, 'வீடு சுத்தம் செய்' என்ற ஒரு கட்டளையை கொடுத்தால் போதும். சோபா, கட்டில், அலமாரி கீழ் போன்ற இடங்களில் சுத்தம் செய்து விடுகிறது.
இல்லத்தரசி கார்த்திகா கூறுகையில், “எங்கள் வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு சுத்தம் செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த ரோபோட் வேக்கியூம் வந்த பிறகு அந்த சிரமம் குறைந்துவிட்டது. மொபைலில் சில பட்டன்களை அழுத்தினால் போதும். தொழில்நுட்பம் அதிகம் தெரியாதவர்களும் எளிதாக பயன்படுத்த முடிகிறது,” என்றார்.