/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
/
தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
ADDED : அக் 10, 2024 05:41 AM
கோவை : சர்வதேச விண்வெளி வாரத்தை முன்னிட்டு, நேற்று தொலைநோக்கி வடிவமைக்கும் விதம் குறித்து மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி வாரத்தை முன்னிட்டு, கோவை மண்டல அறிவியல் மையத்தில் அமைந்துள்ள புதுமைகாண் காட்சி கூடத்தில், தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தலா நான்கு பேர் அடங்கிய, 12 அணிகளாக மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர். ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் அமைப்பின் பயிற்சியாளர்கள் பரத்குமார் மற்றும் பாலாஜி பிரசாத் ஆகியோர் தொலைநோக்கி வடிவமைப்பு பயிற்சி வழங்கினர்.
தொலைநோக்கியின் வகைகள், பயன்கள், வடிவமைக்கும் விதம் ஆகியவற்றை செயல்வழி மூலம் மாணவ, மாணவியர் கற்றுக்கொண்டனர்.