/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் விளையாட மாணவர்களுக்கு அழைப்பு
/
வாலிபால் விளையாட மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் வரும், 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. அதன்படி, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வாலிபால் போட்டியும், 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான த்ரோபால் போட்டியும் இடம்பெறுகிறது.
போட்டிகளில் பங்கேற்க அனுமதி இலவசம். வரும், 7ம் தேதிக்குள் தங்களது அணிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். விபரங்களுக்கு, 98656 42123 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, உடற்கல்வி இயக்குனர் மனோகரன் தெரிவித்துள்ளார்.