ADDED : அக் 22, 2026 06:41 PM

அ நிறம் | அளவு
கோவை: மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ–கோ போட்டிகள் கற்பகம் பல்கலையில் நேற்று (அக்.,21) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில், விருதுநகர் அணி 14–12 என்ற புள்ளிகளில் சேலம் அணியையும், திருவள்ளூர் 18–7 புள்ளிகளில் நீலகிரி அணியையும் வென்றன. இன்று (அக்.,22) கரூர் அணி 17–16 புள்ளிகளில் திண்டுக்கல் அணியையும், கோவை அணி 11–10 புள்ளிகளில் தஞ்சாவூர் அணியையும், ஈரோடு அணி 12–3 புள்ளிகளில் பெரம்பலுார் அணியையும், தருமபுரி அணி 11–9 புள்ளிகளில் திருவாரூர் அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
