/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
புதர் சூழ்ந்த அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
புதர் சூழ்ந்த அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
புதர் சூழ்ந்த அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 11, 2025 11:42 PM

வால்பாறை, ;வால்பாறை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் புதர் சூழ்ந்திருப்பதால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
வால்பாறையில், கடந்த, 2006ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. கடந்த, 2020ல் அரசு கலைக்கல்லுாரியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கல்லுாரியில் போதிய இடவசதி இல்லாததால், சின்கோனா (டான்டீ) மருத்துவமனை வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த, 2022ம் ஆண்டு அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்கள் படிக்க வசதியாக புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
புதிய கட்டடத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுவதாலும், சுற்றுச்சுவர் இல்லாததாலும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இது தவிர, கல்லுாரி விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கல்லுாரி வளாகத்தில் முகாமிடுவதால், மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
மாணவர்கள் கூறியதாவது:
புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், வகுப்பறையை சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுவதால், பகல் நேரத்திலேயே கல்லுாரி வளாகத்தில் பாம்புகள் வரத்துவங்கியுள்ளன.
மேலும், கால்நடைகள் இந்த வழியாக செல்வதால் கல்லுாரி வளாகம் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, வகுப்பறையை சுற்றியும் சுத்தம் செய்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.