/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஸ் போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு
/
செஸ் போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 03, 2025 08:38 PM

வால்பாறை; வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. பள்ளி அளவிலான செஸ் போட்டியை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் துவக்கி வைத்தார். செஸ் போட்டியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 36 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ரெஜினா, ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியில் இன்று நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வர். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். இவ்வாறு, கூறினர்.