/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய ராணுவத்துக்கு மாணவர்கள் மரியாதை
/
இந்திய ராணுவத்துக்கு மாணவர்கள் மரியாதை
ADDED : நவ 11, 2024 04:47 AM

கோவை : மணியகாரம்பாளையம் கேம்போர்டு சர்வதேசப் பள்ளியில், 15வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, 'டைனமிக்ஸ் 2024' என்ற தலைப்பில் நடந்தது.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை தலைமை வகித்தனர். பள்ளியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பூனம் சியால் வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ''இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக, இந்தியா இருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு அதிகமாக உள்ளது. பன்முகத்தன்மை கொண்ட சிறப்பு கொண்ட இந்திய நாட்டின் சிறப்புகளை ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரங்கில் கூடியிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுந்து நின்று, 'ஜெய் ஹிந்த்' என முழக்கமிட்டனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.