/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைத்திருவிழாவில் மாணவர்கள் அசத்தல்
/
கலைத்திருவிழாவில் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 29, 2025 09:33 PM

வால்பாறை, ;வால்பாறையில் உள்ள பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழாவில், மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வால்பாறை ஒன்றியம் குறுவள மையம் அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், 20 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பாட்டுப்போட்டி, மாறுவேடம், நடனம், ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கலைத்திருவிழாவில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில்குமார், ரம்யா மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.