/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் மாணவர்கள் நெல் நடவு
/
வேளாண் பல்கலையில் மாணவர்கள் நெல் நடவு
ADDED : அக் 13, 2025 01:17 AM

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவையில் இளங்கலை வேளாண்மை 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், நன்செய் பண்ணையில் நெல் நடவு செய்தனர்.
இளங்கலை வேளாண் பயிலும் மாணவர்கள், தாங்கள் பயின்ற அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தாமாக நெல் சாகுபடி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு தலா 4 சென்ட் நிலம் வழங்கப்படும். அதில், அவர்கள் சேற்றுழவு முதல், அறுவடை வரையிலான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் மாணவ, மாணவியர் நெல் நடவுப் பணியில் ஈடுபட்டனர்.
டீன் வெங்கடேச பழனிசாமி, உழவியல் துறை தலைவர் கிருஷ்ணன், பயிர் மேலாண்மை இயக்குநர் கலாராணி, விதை உற்பத்தி இயக்குநர் உமாராணி, பேராசிரியர்கள் திருக்குமரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, நெல் நடவைத் துவக்கி வைத்தனர்.