/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே கோ - கோ போட்டி அபாரமாக விளையாடிய மாணவ, மாணவியர்
/
பள்ளிகளுக்கு இடையே கோ - கோ போட்டி அபாரமாக விளையாடிய மாணவ, மாணவியர்
பள்ளிகளுக்கு இடையே கோ - கோ போட்டி அபாரமாக விளையாடிய மாணவ, மாணவியர்
பள்ளிகளுக்கு இடையே கோ - கோ போட்டி அபாரமாக விளையாடிய மாணவ, மாணவியர்
ADDED : டிச 03, 2025 06:52 AM

கோவை: கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் நலச்சங்கம் சார்பில், 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான கோ-கோ போட்டி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்தது. 28 பள்ளிகளை சேர்ந்த, 336 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கவுமார மடாலயம் மேலாளர் ராமநாதன் போட்டிகளை துவக்கிவைத்தார். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த மாணவியருக்கான இறுதிப்போட்டியில், ஆதித்யா குளோபல் பள்ளி, 3-2 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மெட்ரிக் பள்ளி அணியையும், மாணவர்களுக்கான போட்டியில், சூலுார் எம்.டி.என்., பள்ளி அணி, 8-5 என்ற புள்ளிகளில், ஆதித்யா குளோபல் பள்ளி அணியையும் வீழ்த்தி, சாம்பியன்ஷிப் வென்றது.
மாணவியருக்கான போட்டியில், கணுவாய் பாரதி மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடத்தையும், டி.கே.எஸ்., பள்ளி அணி நான்காம் இடத்தையும் வென்றன. மாணவர்களுக்கான போட்டியில், கோவை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடத்தையும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மெட்ரிக் பள்ளி நான்காம் இடத்தையும் வென்றன.
வென்ற அணிகளுக்கு கோப்பைகள், மெடல்கள், 'ரோலிங் டிராபி' ஆகியவற்றை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் ஹெரிடேஜ் தலைவர் கார்த்திகேயன், கேம்ஸ் நலச்சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

