/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி
/
போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஆக 12, 2025 09:20 PM

கோவை, ;ராம்நகர், சபர்பன் மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
போதைப்பொருள் தீமைகள் குறித்த பதாகைகளை தாங்கி, மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். போதை ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் மற்றும் ஹைக்கூ கவிதைகள், மாணவர்களால் எழுதப்பட்டு பொதுமக்கள் காணும் வகையில், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வகுப்பறைகளிலும், தங்கள் எதிர்கால நோக்கம் மாணவர்களால் எழுதப்பட்டு அன்றாடம், அவர்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது
பள்ளியைச் சுற்றிலும் உள்ள கடைகள் உள்ளிட்ட பகுதிகளில், மாணவர்களின் எதிர்கால நோக்கங்கள் எழுதிய கடிதத்துடன், போதை இல்லா சுற்றுச் சூழலை அமைத்து தர, பொதுக்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.