/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்கள் உறுதிமொழி
/
வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஜன 26, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், பல்கலை வளாகத்தில், 16வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், மாணவர்களுக்கு ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'என் இந்தியா; என் ஓட்டு' என்ற வாக்காளர் தின புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் அச்சமின்றி பொறுப்புடன் வாக்களிக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
துணை கலெக்டர் வாணிலட்சுமி, மாநகராட்சி உதவி கமிஷனர் துரைமுருகன், பல்கலை வெளியுறவுத் துறை இயக்குனர் அன்பழகன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடினர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

