ADDED : பிப் 06, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கோவை, :சின்னியம்பாளையத்தில், செவன் ஸ்டார் என்ற கிளப் செயல்படுகிறது. அங்கு மது குடிக்க சென்ற கல்லுாரி மாணவர்களிடையே நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி சேர் மற்றும் கார்களை உடைத்து சேதப்படுத்தினர்.
பீளமேடு போலீசார் விசாரித்து, சிவனேஷ்வர், சேதுராம், ேஹமானந்த், நவநீதன் ஆகியோரை தேடி வருகின்றனர். கோல்டுவின்சிலுள்ள ஆர்கேடியா ஓட்டல் பாரிலும் மது குடித்த மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சேர்களை அடித்து நொறுக்கினர். பாட்டில்களை உடைத்து ரகளை செய்தனர். நிரஞ்சன், சிவராம், முகமது ஆசாத், கவுதம், பைசல் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.
