/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இதுவரை 'ஸ்வெட்டர்' தரல மாணவர்கள் குளிரில் நடுக்கம்
/
இதுவரை 'ஸ்வெட்டர்' தரல மாணவர்கள் குளிரில் நடுக்கம்
இதுவரை 'ஸ்வெட்டர்' தரல மாணவர்கள் குளிரில் நடுக்கம்
இதுவரை 'ஸ்வெட்டர்' தரல மாணவர்கள் குளிரில் நடுக்கம்
ADDED : ஆக 06, 2025 12:43 AM
வால்பாறை:மலைப்பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு, இதுவரை, 'ஸ்வெட்டர்' வழங்காததால் குளிரில் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை, நீலகிரி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில், ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாகும். இந்த மாதங்களில் அங்கு கடுமையான குளிர் நிலவும் என்பதால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும், 'ஸ்வெட்டர்' வழங்கப்படுகிறது. இந்த பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த கல்வியாண்டில் ஜூனில் வழங்கப்பட வேண்டிய ஸ்வெட்டர், இதுவரை வழங்கப்பட வில்லை. இதனால் மாணவர்கள் குளிரில் நடுங்குகின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'இந்த கல்வியாண்டில் ரெயின்கோட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்வெட்டர் வழங்கப்படவில்லை' என்றனர்.