/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாணவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்'
/
'மாணவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்'
ADDED : ஆக 08, 2025 09:18 PM

கோவை; கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
அமரூன் பவுண்டரீஸ் நிர்வாக பங்குதாரர் விஸ்வநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''வேலைவாய்ப்புகளை மட்டும் நாடாமல், மாணவர்கள் சுயமாக தொழில் துவங்க முன்வர வேண்டும். சிறிய முதலீட்டில் துவங்கி, திட்டமிட்டு உயர்நிலைக்குச் செல்ல வேண்டும்,'' என்றார்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரியின் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில், 165 மாணவர்களுக்கும், கோவை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதுகலைப் பட்ட பிரிவு 25 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. கோவை கலைமகள் கல்வி நிறுவனங்களின் செயலர் சின்னராசு, அறங்காவலர் தங்கவேலு, முதல்வர்கள் மாலா, லதா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.