/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெற்ற கல்வியால் மாணவர்கள் சமுதாயத்தை முன்னேற்றணும்'
/
'பெற்ற கல்வியால் மாணவர்கள் சமுதாயத்தை முன்னேற்றணும்'
'பெற்ற கல்வியால் மாணவர்கள் சமுதாயத்தை முன்னேற்றணும்'
'பெற்ற கல்வியால் மாணவர்கள் சமுதாயத்தை முன்னேற்றணும்'
ADDED : ஜூன் 16, 2025 11:37 PM

கோவை; நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
பெங்களூரு வடக்கு பல்கலை துணைவேந்தர் நிரஞ்சனா, கல்லுாரி கையேட்டை வெளியிட்டார். அவர் பேசுகையில், ''கற்றக் கல்வியைச் சமுதாய முன்னேற்றத்திற்குப் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். சுய ஒழுக்கம், கடின உழைப்பு, நேர மேலாண்மை உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். தொடர் கற்றலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும், '' என்றார்.
கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான, பெங்களூரு ராஷ்டிரிய ராணுவப் பள்ளி முதல்வர் லெப்டினன்ட் கர்னல் அனுப் நாயர், கோவை கொண்டாஸ் ஆட்டோமேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் கொண்டாஸ் ஆகியோர், தங்கள் தொழில் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
விழாவில், கதக் நடனக் கலைஞர்கள் ஹரி, சேத்தனா ஆகியோருக்கு, 'நாட்டிய நந்தனா விருது' வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் சிவக்குமார், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.