/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாணவியர் தற்காப்பு பயிற்சி கற்க வேண்டும்'
/
'மாணவியர் தற்காப்பு பயிற்சி கற்க வேண்டும்'
ADDED : ஜூன் 17, 2025 11:05 PM

கோவை; பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில்,முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி தலைவர் நந்தினி தலைமை வகித்து, முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி, வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் கோவை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பேசுகையில், ''கல்லுாரியில் பயிலும் போது தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
''தற்காப்பு பயிற்சிகள் கற்க வேண்டும். சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை மிகவும் எச்சரிக்கையுடன் மாணவிகள் பயன்படுத்த வேண்டும், '' என்றார்.
கல்லூரி செயலாளர் யசோதாதேவி, ஹாரதி, எஸ்2எஸ் ஆளுமை மேம்பாட்டு அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.