/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
/
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
ADDED : டிச 28, 2025 05:12 AM

கோவை, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், எஸ்.என்.எஸ். அகாடமி பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது.
அந்த அணியை சேர்ந்த கேசவ் விவேக் மற்றும் ரயான் தேவ் ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ், இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
கிப்ட் ஸ்பான்சர்கள் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனைத்திறன் மற்றும் பொது அறிவை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இத்தகைய வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான அடுத்த கட்ட போட்டி வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

