ADDED : செப் 21, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. கனிணி பயன்பாட்டுத்துறை மாணவர்களுக்கான கருத்தரங்கிற்கு முதல்வர் ஷீலாபானு தலைமை வகித்தார். துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லுாரி துறை தலைவர் பரமேஸ்வரி கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், பேராசிரியர் கோபி, உதவி பேராசிரியர் அபிராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
