ADDED : செப் 21, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
உடுமலை: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோர், நேற்று முதல் அக். 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிகளை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு கட்டணம், 200 ரூபாயை www.karuvoolam.tn.gov.in மூலம் ‘இ- சலான்’ செலுத்தி, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்நிலை எழுத்துத்தேர்வு, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ. 26-ம் தேதியும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு செய்முறைத்தேர்வு நவ. 27-ம் தேதியும் நடைபெறும்.
