/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளி கணினி ஆய்வகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பாடு மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
/
அரசுப்பள்ளி கணினி ஆய்வகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பாடு மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
அரசுப்பள்ளி கணினி ஆய்வகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பாடு மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
அரசுப்பள்ளி கணினி ஆய்வகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பாடு மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
ADDED : டிச 07, 2025 09:25 AM
கோவை: அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஆய்வகங்களுக்கு தகுதியான கணினி ஆசிரியர்கள் நியமிக்காததால், கோடிக்கணக்கான நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால், நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களுக்கு பயிற்றுநர்கள் சரிவர நியமிக்கவில்லை என்கின்றனர் மாணவர்கள்.
இதனால், மாணவர்களுக்கு கணினி தொடர்பான அடிப்படைத் திறன்கள் சென்றடையவில்லை. கணினி ஆசிரியர்கள் நியமிக்காமல், ஆய்வகங்கள் பெயரளவுக்கு திறக்கப்பட்டு, எவ்வித கற்றல் செயல்பாடுகளும் இன்றி பயனற்று இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், ''தற்போது தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை, ஆய்வகங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். மத்திய அரசு அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்திற்கு நகர்ந்து வருகிறது.
ஆனால், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் கணினியின் அடிப்படை திறனறிவு தெரியாத நிலையில் உள்ளனர். மத்திய அரசு நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி கற்பிக்க, பல கோடி நிதியை வழங்குகிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கணினி ஆய்வகங்களையும், கல்வியையும் முறையாக கற்றுக் கொடுக்கின்றன,'' என்றார்.
இதனால், அரசுப் பள்ளி மாணவர்களை நவீன தொழில்நுட்ப யுகத்திற்குத் தயார் செய்யவும், கணினி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை நியமித்து, இந்த ஆய்வகங்களை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி கற்பிக்க, பல கோடி நிதியை வழங்குகிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கணினி ஆய்வகங்களையும், கல்வியையும் முறையாக கற்றுக் கொடுக்கின்றன.

