/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் முன்னணி
/
தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் முன்னணி
ADDED : செப் 24, 2024 11:46 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர், பாரதியார் பல்கலையின் தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே நடந்த, இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விபரம், தரவரிசை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில், பூசாரிப்பட்டி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், 2021-24ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவியர் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளனர்.
அதன்படி, இளங்கலை பாதுகாப்பியல் துறை சேர்ந்த மாணவி துர்கா முதலிடம், சபரிநாதன் இரண்டாமிடம், கேத்ரின்ஜெய்ஸி நான்காமிடம், லாவண்யா ஏழாமிடம் பிடித்துள்ளனர். இதேபோல, இளங்கலை வணிகவியல் மற்றும் மின்னணு வணிகம் துறையைச் சேர்ந்த மாணவி தரண்யா எட்டாமிடம் பிடித்துள்ளார்.
இவர்களை, கல்லுாரி தலைவர் ரத்தினம், கல்லுாரிச் செயலாளர் அருள்மொழி, தாளாளர் மகேந்திரன், கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.