ADDED : டிச 23, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : வேளாண் பல்கலையின் பயோ டெக்னாலஜி துறையில் உள்ள தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி செயல்பாடுகளை, பள்ளிமாணவர்கள் பார்வையிட்டனர்.
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும், வேளாண் சார்ந்த ஆராய்ச்சிகள், உயர்கல்வி தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில், பல்கலைக்கு வருகை புரிந்தனர்.
பயோ டெக்னாலஜி துறையின் ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், தாவர திசு வளர்ப்பு, இயந்திரங்களின் பயன்பாடு, விவசாய சவால்கள், அறிவியலின் புதுமை, குறித்து பயோ டெக்னாலஜி துறை பேராசிரியர் ராஜகோபால், துறைத்தலைவர் கோகிலாதேவி ஆகியோர் விளக்கமளித்தனர்.

