/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு
/
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : செப் 14, 2025 11:33 PM

கோவை; கொங்குநாடு அறக்கட்டளை மற்றும் மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில், ஒன்பதாம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கொங்கு தேவராஜ் தலைமை வகித்தார்.
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், முன்னாள் கலெக்டர் ராஜாமணி, இந்துஸ்தான் கல்லுாரி தாளாளர் சரஸ்வதி, விவேகம் உயர்நிலைப்பள்ளி தாளாளர் சுப்பிரமணியம், பிரகதி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற, 750க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி, கவுரவித்தனர்.
மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் ராஜேந்திரன், கொங்குநாடு அறக்கட்டளை செயலாளர் கோகுல்ராஜ், மாநில கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை பொருளாளர் செல்வம், நிர்வாகிகள் தேவராஜ், செந்தில்குமார், செல்வபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.