/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறன் போட்டியில் சாதித்த மாணவர்கள்
/
திறன் போட்டியில் சாதித்த மாணவர்கள்
ADDED : டிச 01, 2025 05:38 AM

கோவை: பன்னீர்மடை அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், டேக் திறன் தேடல் போட்டி வெற்றிகரமாக நடந்தது. இந்த தேர்வில் கோவை மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த, பல பள்ளிகளில் இருந்து 610 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பள்ளியின் செயலாளர் பட்டாபிராம் வழங்கி கவுரவித்தார். மதிப்பெண் அடிப்படையில் அடுத்த, 25 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

