ADDED : மார் 16, 2026 05:13 AM
கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் தொழில்துறை ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இதில், 746 அணிகளைச் சேர்ந்த, 2,036 மாணவர்கள் பங்கேற்றனர்.
டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் குளோபல் அதிகாரி விக்துவார் டி மார்கெரி, உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரொக்கத்தை முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் பெற்றனர். இரண்டாம் பரிசை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் வென்றனர். மேலும், சிறந்து விளங்கிய 19 அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி, சுசீந்திரன், கல்லுாரி நிறுவனர் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, டான்காம் தலைமை நிர்வாக அதிகாரி விஜயதீபன், துணைத் தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
