/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்
/
அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்
ADDED : பிப் 10, 2025 11:40 PM

கோவை; டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'கணம்' என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலை விழா இரண்டு நாட்கள் நடந்தது.
மாணவர்களின் எல்லையற்ற அறிவு மற்றும் கலை சார்ந்த திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாகப் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
மைண்டு மேப் எஸ்கேப், பேஸ் டு பேஸ், வாட்டர் ராக்கெட்டரி, ரீல் ஓ மேனியா, தமிழோடு விளையாடு, ஸ்குவிட் கேம், மைக் மாஸ்டர்ஸ், மெலொடி மேக்கர்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். கணினியியல், வணிகவியல், அறிவியல், பொறியியல், மேலாண்மை, விளையாட்டு சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வகையான போட்டிகளும் இடம்பெற்றன.
பல்வேறு கலலுாரிகளிலிருந்து, 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, என்.ஜி.பி., கல்வி குழுமங்களின் செயலாளர் தவமணி தேவி பரிசுகளை வழங்கினர்.இறுதியாக நடந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசை நிகழ்வில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.