/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா; ஆசிரியர்களை கவுரவித்த மாணவர்கள்

ADDED : பிப் 17, 2025 12:13 AM
கோவை; உப்பிலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சிங்காநல்லுார் அருகே உப்பிலி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா, நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பு விழா என, முப்பெரும்விழா நடந்தது. முன்னாள் மாணவர்கள் தலைமையில் நடந்த இவ்விழாவில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களான லட்சுமி, அங்குத்தாய், சித்ரா ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் பேசுகையில், ''மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வி பயில, அரசு செயல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து படித்தாலே, மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற்று விடலாம். அதேபோல், பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
எஸ்.எஸ்.குளம் வட்டாரக் கல்வி அலுவலர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கினர்.