/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைக்கு 'நோ' சொல்லும் மாணவர்கள்
/
போதைக்கு 'நோ' சொல்லும் மாணவர்கள்
ADDED : ஆக 11, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து, பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில், 'போதைப்பொருள் வேண்டாம்; வாழ்க்கை வேண்டும்' போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.