/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலத்த பரிசோதனைகளுக்கு பின் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்
/
பலத்த பரிசோதனைகளுக்கு பின் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்
பலத்த பரிசோதனைகளுக்கு பின் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்
பலத்த பரிசோதனைகளுக்கு பின் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள்
ADDED : மே 04, 2025 10:29 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில் நடந்த 'நீட்' தேர்வை எழுத, 480 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 21 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
தேசிய தேர்வு முகமை சார்பில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
அவ்வகையில், நேற்று 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது. பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில் மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடந்தது.
அதற்காக, காலை, 11:00 முதலே மாணவ, மாணவியர் மையத்திற்கு வந்தனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதன்படி, 480 பேர் விண்ணப்பிருந்த நிலையில், 21 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். அதேநேரம், அசல் ஆவணங்கள் இல்லாததால், ஒரு மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
* திருப்பூர் மாவட்டத்தில், நீட் நுழைவுத்தேர்வுக்காக, 7 மையங்கள் தேர்வாகி, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில், உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 480 மாணவ, மாணவியர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நேற்று பலத்த பரிசோதனை, கண்காணிப்புக்கு பின், மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 461 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்; 19 பேர் தேர்வு எழுதவில்லை.