/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறனாய்வு தேர்வில் வென்ற மாணவர்கள்
/
திறனாய்வு தேர்வில் வென்ற மாணவர்கள்
ADDED : ஏப் 25, 2025 11:32 PM
பொள்ளாச்சி: முதல்வர் திறனாய்வு மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.
பொள்ளாச்சி அருகே நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 1 மாணவர் சந்தோஷ், முதல்வர் திறனாய்வு மற்றும் தமிழ் இலக்கியத் திறனாய்வுத் தேர்வுகளில், தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.
குறிப்பாக, முதல்வர் திறனாய்வு வாயிலாக, இளங்கலை பட்டப்படிப்பு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய்; தமிழ் இலக்கிய திறனாய்வு வாயிலாக, மாதம் 1,500 ரூபாய் வீதம், இரு ஆண்டுகள் உதவித் தொகை பெறுவதற்கு, தகுதி பெற்றுள்ளார்.
இதேபோல, 8ம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீஹரி, ஆனந்தவிநாயகம் ஆகியோர் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களை, பள்ளித்தலைமையாசிரியர் கனகராஜன், உதவி தலைமையாசிரியர் மகேந்திரபிரபு, ஆசிரியர்கள் பாலாஜிராஜா, சுமதி, பெற்றோர்கள் உட்பட பலரும் வாழ்த்தினர்.

