/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யோகா போட்டியில் வென்ற மாணவர்கள்
/
யோகா போட்டியில் வென்ற மாணவர்கள்
ADDED : செப் 02, 2025 08:03 PM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், கரடிவாவி வாணி இன்டர்நேஷனல் பள்ளியில், ஸ்ரீமஹாதேவ் யோகா சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள, கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்பிள் டாட் பள்ளி மாணவ, மாணவியரும் அடங்குவர்.
அதன்படி, மழலையர் பிரிவு போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவ, மாணவியர், பல்வேறு ஆசனங்களை செய்து, முதலிடம் பிடித்தனர். இவர்களை, பள்ளி நிர்வாகி கவுதமன், பள்ளி முதல்வர் கனகதாரா, துணை முதல்வர்கள் மாரியம்மாள், சன்மதி, யோகா ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.