/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கையெழுத்து போட்டியில் பரிசுகளை அள்ளிய மாணவர்கள்
/
கையெழுத்து போட்டியில் பரிசுகளை அள்ளிய மாணவர்கள்
ADDED : செப் 26, 2025 05:27 AM
கோவை; துளசி பார்மசி நிறுவனம் சார்பில்,17வது மாநில அளவிலான கையெழுத்துப் போட்டி மூன்று மண்டலங்களில், 32 மாவட்டங்களில் நடந்தது.896 பள்ளிகளிலிருந்து மொத்தம் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்றனர்.
கோவையில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கையெழுத்துப் போட்டி வேளாண் பல்கலை வளாகத்தில் நடந்தது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கையெழுத்துப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், ஸ்டடி டேபிள் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.
துளசி பார்மசி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி வினித் நாயர் மற்றும் கிரீன் கார்டன் கையெழுத்து மைய இயக்குனர் செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.