தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராக்கெட் ஏவும் காட்சியை நேரில் கண்ட மாணவர்கள்

 ராக்கெட் ஏவும் காட்சியை நேரில் கண்ட மாணவர்கள்

 ராக்கெட் ஏவும் காட்சியை நேரில் கண்ட மாணவர்கள்


ADDED : ஜன 15, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான, விண்வெளி வினாடி - வினா போட்டியை நடத்தியது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் சுமார் 15,000 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்துசெயற்கைக்கோள் ஏவுதலை காணும் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஜன., 12ம் தேதி பி.எஸ்.எல்.வி, - சி 62 ராக்கெட் ஏவுதலை மாணவர்கள் கண்டனர்.

மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை துாண்டும் வகையில், சக்தி பொறியியல் கல்லுாரி இந்த வினாடி - வினா போட்டியை நடத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us