sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இஷ்டப்பட்டு படியுங்க; வாழ்க்கை ஜம்முனு இருக்கும்! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

/

இஷ்டப்பட்டு படியுங்க; வாழ்க்கை ஜம்முனு இருக்கும்! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

இஷ்டப்பட்டு படியுங்க; வாழ்க்கை ஜம்முனு இருக்கும்! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

இஷ்டப்பட்டு படியுங்க; வாழ்க்கை ஜம்முனு இருக்கும்! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை


UPDATED : ஜூலை 01, 2025 07:29 AM

ADDED : ஜூன் 30, 2025 10:40 PM

Google News

UPDATED : ஜூலை 01, 2025 07:29 AM ADDED : ஜூன் 30, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரியில், இஷ்டப்பட்டு படித்தால், வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும், என, மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்து பேசும் போது, ''மாணவர்கள் படிப்பில் மட்மே கவனம் செலுத்த வேண்டும். எவ்வித தீய பழக்க வழக்கத்துக்கும் ஆளாக கூடாது. மாணவர்கள் வருகை பதிவேடு நாள் தோறும் பதிவு செய்யப்படும். 65 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் கல்லுாரிக்கு வருகை தந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

''ஆறு மாதத்திற்கு ஒரு முறை கல்லுாரியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்களின் பெற்றோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,'' இவ்வாறு, பேசினார்.

வால்பாறை டி.எஸ்.பி., பவித்ரா பேசியதாவது:

மாணவர்கள் லட்சியத்துடன் படிக்க வேண்டும். கல்வியறிவு மேம்பட நுாலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிக்க வேண்டும். கஷ்டப்பட்டு படிக்க கூடாது, இஷ்டப்பட்டு படித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

மாணவர்களுக்கு மனக்கட்டுப்பாடு மிக அவசியம். போதை பொருட்களுக்கு மாணவர்கள் ஒரு போதும் அடிமையாகக்கூடாது. மாணவியர் கட்டாயம் டிரைவிங் கற்றுக்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ெஹல்மெட் அணிவேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. இவ்வாறு, பேசினார்.

வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை தலைவர் பெரியசாமி பேசினார். நுாலகர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

உடுமலை


உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டில், 864 இடங்கள் உள்ளன. கலந்தாய்வின் அடிப்படையில், 759 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து நேரடி மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.

இந்நிலையில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் துவங்கியது. தொடர்ந்து ஒருவாரம் வரை மாணவர்களுக்கான புத்துணர்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது.

கல்லுாரியில், நேற்று அறிமுக விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமை வகித்தார். துறை பேராசிரியர்கள், கல்லுாரியின் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து விளக்கமளித்தனர்.

பொள்ளாச்சி


பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால அறிமுக பயிற்சி திட்டத்தின் முதல் நாளான நேற்று மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்து, அறிமுக பயிற்சி திட்டம் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, பாடத்திட்டம், தேர்வு அமைப்பு குறித்து கல்லுாரி இணைப்பேராசிரியர் புஷ்பலதா விளக்கினார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். போட்டித்தேர்வில் பங்கேற்பதன் அவசியம், எவ்வாறு எதிர்கொள்வது குறித்து விளக்கமளித்தார்.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us