/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பொதுமேலாளர் போத்தனுாரில் ஆய்வு
/
ரயில்வே பொதுமேலாளர் போத்தனுாரில் ஆய்வு
ADDED : மார் 09, 2024 08:17 AM

போத்தனூர் : போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகளை, தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணியர் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், உள்ளிட்ட பல்வேறு பணிகள், ரூ. 27 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இப்பணிகளை நேற்று மதியம், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். பணி விபரங்களை, சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா விளக்கினார்.
தொடர்ந்து, எஸ் அண்ட் டி தொழிற்சாலைக்கு சென்று, அங்கு உருவாக்கப்படும் பொருட்களை பார்வையிட்டார். பணிமனை முதன்மை மேலாளர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, பொது மேலாளருக்கு எஸ்.ஆர்.எம்.யூ,, சார்பில், கிளை தலைவர் கணேசன், துணை தலைவர் ஜெரோம், செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சார்பில், பொன்னாடை போர்த்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது.