/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலையில் ஆய்வு; மாலையில் ரோடு!
/
காலையில் ஆய்வு; மாலையில் ரோடு!
ADDED : அக் 16, 2024 12:18 AM

கோவை : கோவையில் பெய்த மழைக்கு, கள்ளிமடை கதிரவன் லே-அவுட் பகுதியில் மண் ரோடு சேறும் சகதியுமாக மாறியிருந்தது. சங்கனுார் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் பொங்கியதால், அப்பகுதி பாதிப்புக்குள்ளானது. இப்பகுதியை, தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பார்வையிட்டார்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது வீடுகள் அமைந்துள்ள இடத்துக்கு நேரில் வந்து பார்க்க அழைப்பு விடுத்தனர். சேறும் சகதியுமாக இருந்த அந்த ரோட்டில், அதிகாரிகளுடன் அமைச்சர் சென்றார். புதிதாக ரோடு போட்டுக் கொடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதையேற்று, நேற்று மாலையே மண் ரோடு சமன் செய்யப்பட்டு, தார் ரோடு போடும் பணி இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது.
சங்கனுார் ஓடையில் இருந்து, தண்ணீர் வராத அளவுக்கு மணல் மூட்டைகள் தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.