/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு
/
மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு
ADDED : பிப் 16, 2024 09:01 PM
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மயான பூஜை நடைபெறும் இடத்தில், துாய்மை பணி குறித்து பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வரும், 22ம் தேதி மயான பூஜை நடக்கிறது.
இதையடுத்து, மயான பூஜை நடைபெறும் பகுதியில் துாய்மை பணிகள், வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, கோவில் உதவி ஆணையர் (பொ) கைலாசமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் வரும் வழித்தடம் துாய்மையாக இருக்க வேண்டும், அங்கு வருவோர் அமருவதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தேவையான பணிகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசித்தனர். பேரூராட்சி மற்றும் கோவில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.