/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெல்லத்தில் கலப்படம் அறிய நடக்கிறது ஆய்வு
/
வெல்லத்தில் கலப்படம் அறிய நடக்கிறது ஆய்வு
ADDED : ஜன 08, 2026 05:03 AM
கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெல்லம் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் வெல்லம் தயாரிப்பு பணிகள் சூடுபிடித்துள் ளன. கோவை சந்தைகளுக்கு அதிகளவில் வெல்லம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், கலப்படம் செய்யப்பட்ட வெல்லமும் உண்டு. வெல்லம் வெளிர்நிறமாக இருக்க சர்க்கரை, மைதா, ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக கூறும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கள ஆய்வு துவக்கியுள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பொதுவாக பண்டிகை காலங்களில், பண்டி கை தொடர்பான உணவு பொருட்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்படும். அதன் படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பொ ங்கல் பண்டிகை வரை, தொடர்ந்து கண்காணிக்கப்படும், '' என்றார்.

