/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு முன் ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்படும் துணைப்பதிவாளர் தகவல்
/
தீபாவளிக்கு முன் ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்படும் துணைப்பதிவாளர் தகவல்
தீபாவளிக்கு முன் ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்படும் துணைப்பதிவாளர் தகவல்
தீபாவளிக்கு முன் ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கப்படும் துணைப்பதிவாளர் தகவல்
ADDED : அக் 21, 2024 04:02 AM
கோவை : ''கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், தீபாவளிக்கு முன் அனைத்து ரேஷன் பொருட்களும் முழுமையாக வழங்கப்படும்,'' என, பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறினார்.
கோவை மாவட்டத்தில், 1,540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக, 11 லட்சம் கார்டுதாரர்கள் மாதம் தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.
தீபாவளி பண்டிகை வருவதால் ரேஷன் கார்டுதாரர்கள், இந்த மாதத்துக்கான பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை, முழுமையாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், தீபாவளிக்கு முன் அனைத்து ரேஷன் கடைகளிலும், ரேஷன் பொருட்களை முழுமையாக கொடுத்து முடித்து விடுவோம்.
குடோனில் இருந்து பொருட்கள், கடைகளுக்கு முழுமையாக சப்ளை செய்யப்பட்டுள்ளன. பருப்பு மட்டும் இன்னும் 60 டன் வரவேண்டி உள்ளது.
அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை மூன்று மாதங்களுக்கும், பாமாயில் ஆறு மாதங்களுக்கும் தேவையான அளவு இருப்பு உள்ளது.
பருப்பு மட்டும்தான் கொஞ்சம் குறைவாக உள்ளது. அதுவும் இந்த மாத இறுதிக்குள் வந்துவிடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.