ADDED : செப் 26, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.
சர்வர் பிரச்னையால் தினமும் இரவு 8:00 மணி வரை பணிபுரிய வேண்டி இருந்ததால், சனியன்றும் பணிக்கு வர வேண்டி இருந்தது. எனவே இந்த அறிவிப்பு சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் செப். 12, 19 மற்றும் நேற்று என மூன்று சனிக்கிழமைகளிலும், சார்பதிவாளர் அலுவலகம் வழக்கம் போல் செயல்பட்டது. பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் அறிவித்தது எப்போது அரசாணையாக வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
