/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார் பதிவாளர் பணியிட மாற்றம்; பத்திரப்பதிவில் தாமதம்
/
சார் பதிவாளர் பணியிட மாற்றம்; பத்திரப்பதிவில் தாமதம்
சார் பதிவாளர் பணியிட மாற்றம்; பத்திரப்பதிவில் தாமதம்
சார் பதிவாளர் பணியிட மாற்றம்; பத்திரப்பதிவில் தாமதம்
ADDED : ஆக 29, 2025 10:19 PM
அன்னுார்; சார் பதிவாளர் மாற்றப்பட்டதால் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தின் கீழ், 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு அதிக அளவில் புதிய 'லே-அவுட்'கள் அமைக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இங்கு சாதாரண நாட்களில், 50 முதல் 100 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் 100 முதல் 150 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சார்பதிவாளர் மட்டுமே செயல்பட்டு வந்தார். பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர்களின் கோரிக்கையை ஏற்று 2022ம் ஆண்டு முதல் இரண்டு சார் பதிவாளர்கள் செயல்படும் வகையில் அலுவலக தரம் உயர்த்தப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக இரண்டு சார் பதிவாளர்கள் செயல்பட்டு வந்தனர். இரு வாரங்களுக்கு முன்பு ஒரு சார்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு பதில் வேறு சார் பதிவாளர் நியமிக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இரண்டு சார் பதிவாளர்கள் இருந்தால் முகூர்த்த நாட்களில் எளிதில் பத்திரம் பதிவு செய்துவிட்டு செல்ல முடிகிறது. ஒருவர் மட்டும் உள்ளதால் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே அரசு மீண்டும் மற்றொரு சார்பதிவாளரை பணி நியமனம் செய்ய வேண்டும்,' என்றனர்.