ADDED : மார் 11, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சார் பதிவாளர் அலுவலகம், 1920ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இங்கு, 26 கிராமங்களுக்கு பத்திரப்பதிவு சேவை வழங்கப்படுகிறது.
தற்போது, இந்த அலுவலகத்தில் பின்பக்கம், 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., தாமோதரன், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், சார் பதிவாளர் கிருஷ்ணசாமி மற்றும் பத்திர எழுத்தர்கள் பங்கேற்றனர்.
