தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுப்ரமணிய சுவாமிக்கு நாளை திருக்கல்யாணம்

 சுப்ரமணிய சுவாமிக்கு நாளை திருக்கல்யாணம்

 சுப்ரமணிய சுவாமிக்கு நாளை திருக்கல்யாணம்


ADDED : மார் 30, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாளை (1ம் தேதி) சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 74ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை (1ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி- தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

வரும், 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து பாலத்தில் இருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் அலங்கரிக்கபட்ட தேரில் சுப்ரமணிய சுவாமி தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us