/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
ADDED : அக் 26, 2025 11:23 PM
சூலூர்: மக்காசோள சாகுபடியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மக்காச் சோளம், சோளம், தட்டைப் பயிறு, பாசிப்பயிறு உள்ளிட்ட பயிறு வகை பயிர்கள், தனியாகவும், தென்னையில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக மகசூல் தரும் சோளம், மக்காச்சோள ரகங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், செயல் விளக்க திடல் அமைக்கவும் விவசாயிகளுக்கு, இடு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின் றன. சோள விதைப்பண்ணையை ஆய்வு செய்த வேளாண் உதவி இயக்குனர் அருள் கவிதா, வேளாண் துணை அலுவலர் எழிலரசு, உதவி அலுவலர் கந்தசாமி ஆகியோர் இடுபொருட்களை வழங்கினர்.
நிலக்கடலை, எள் உள்ளிட்ட தானியங்களில் அதிக மகசூல் பெறவும், மண்ணின் வளத்தை காக்கவும், நுண்ணூட்ட கலவைகள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடு பொருட்கள் குறித்த மேலும் விபரங்களுக்கு, சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் அழைப்பு விடுத் துள்ளனர்.

